
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் வரலஷ்மி, இவர் தனது நடிப்பு திறமையால் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர். மிகவும் தைரியமான பெண்ணான இவர் சமுதாய கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் எதிர்த்து பல தருணங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் இவர் தனக்கு குழந்தை பருவத்தில் நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளியிட்ட தகவல், பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வரலஷ்மியின் சிறுவயதில், சரத்குமாரிடம் வேலைபார்த்த சுந்தரமூர்த்தி என்ற நபர் , வரலஷ்மியிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு அந்த வயதில் யாரிடம் இந்த விஷயத்தை சொல்வது என்று கூட தெரியாது.வளர்ந்த பிறகு தான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புரிய ஆரம்பித்தது என வரலஷ்மி தெரிவித்திருக்கிறார்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தவறான தொடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தைரியமாக இது போன்ற பிரச்சனைகளை அனுகும் தைரியத்தை அளிக்க வேண்டும். என அவர் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில், இது போன்ற விழிப்புணர்வு மிகவும் அவசியமே.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.