
நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக மதுரவாயிலில் உள்ள வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். ஏற்கனவே விஜயகுமாருக்கு அவருடை மகள், வனிதாவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை ஒதுக்கு வைத்திருந்தார். தற்போது விஜயகுமார் வனிதா தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமாருக்கு சொந்தமான பங்களாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயகுமாரின் மகளூம், நடிகையுமான வனிதா, இந்த பங்களாவை படப்பிடிப்பிற்கு வேண்டும் என்று வாடகை எடுத்துள்ளார். ஆனால், குறித்த நாட்கள் தாண்டியும் பங்களாவை காலி செய்யாமல் இந்த பங்களா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடினார். இதனால் வனிதா மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த 8 நண்பர்கள் இருந்தனர். இதையடுத்து மதுரவாயல் காவல்நிலையத்தில் விஜயகுமார் புகார் தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் இந்த பங்களா, விஜயகுமாரின் இன்னொரு மகளான நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து, நடிகை வனிதாவை பங்களாவை விட்டு வெளியேற்றினர். பங்களாவிற்கு பூட்டுபோட்டு விஜயகுமாரிடம் சாவியை ஒப்படைத்தனர் போலீசார். மேலும் வனிதாவுக்கு ஆதரவாக இருந்த 8 பேரை கைது செய்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.