பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் நேற்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது மறைவு குறித்து அறிந்த மூத்த நடிகை வைஜந்தி மாலா, நடிகர் திலீப் குமாருடன் நடித்த அனுபவங்களை பற்றி வீடியோ வெளியிட்டு கலங்கியபடி கூறியுள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் நேற்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவரது மறைவு குறித்து அறிந்த மூத்த நடிகை வைஜந்தி மாலா, நடிகர் திலீப் குமாருடன் நடித்த அனுபவங்களை பற்றி வீடியோ வெளியிட்டு கலங்கியபடி கூறியுள்ளார்.
நடிகை வைஜந்தி மாலா சுமார் 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகை கலக்கியவர், தமிழில் வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மர்ம வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் இவர் நடித்த பாலிவுட் படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத சித்திரம் போன்றவை. குறிப்பாக நடிகர் திலீப் குமாருடன் மட்டும் சுமார் 8 படங்களில் நடித்துள்ளார்.
திலீப் குமாருடன் இவர் நடித்த தேவதாஸ், நயா டவுர், மதுமதி உள்ளிட்ட 8 படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஹிட் ஜோடி என ரசிகர்களால் அந்த காலத்தில் கொண்டாடப்பட்டனர். இந்நிலையில் நடிகர் திலீப் குமாரின் மரணம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக. வைஜயந்தி மாலா தெரிவித்து அவருடன் நடித்த தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... என் அன்பிற்குரிய தேவதையே சாய்ரா... இந்த நேரத்தில் என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. அவர் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. ஆனால் எப்போதும் அவர் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்களுடனான நினைவுகள் மிகவும் சந்தோஷமானது. இருவரும் இணைந்து அதிகபட்சமான படங்களில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளோம். நாம் நடித்த 8 படங்களுமே வெற்றி படங்களாக அமைந்துள்ளது. நீங்கள் மிகவும் அற்புதமான கோ ஸ்டார். உதவும் எண்ணம் கொண்டவர். அற்புதமான மனிதர். உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு பெருமை படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரது மனைவி சாய்ரா பற்றி கூறுகையில், நீ மிகவும் நல்லவள். மிகவும் தூய மனம் கொண்டவர்கள். எப்போதும் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என கலங்கியபடி கூறியுள்ளார்.