Actress Trisha : அப்பாடா... ‘நெகடிவ்’ வந்துருச்சு - உற்சாகம் ததும்ப ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன திரிஷா

Published : Jan 12, 2022, 07:58 AM IST
Actress Trisha : அப்பாடா... ‘நெகடிவ்’ வந்துருச்சு - உற்சாகம் ததும்ப ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன திரிஷா

சுருக்கம்

முதன்முறையாக நெகடிவ் என்கிற வார்த்தையை கேட்டு மிகுந்த உற்சாகம் அடைந்ததாக தெரிவித்துள்ள திரிஷா, தான் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள், சமீபகாலமாக கொரோனாவின் பிடியில் சிக்கி வருகின்றனர். கடந்த மாதம் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர். இதையடுத்து புத்தாண்டு தொடங்கியது முதலே, பலரும் கொரோனாவின் வலையில் சிக்கி வந்தனர்.

நடிகைகள் திரிஷா, குஷ்பு, மீனா, ஷோபனா, கீர்த்தி சுரேஷ், ரைசா ஆகியோரும், நடிகர்கள் அருண்விஜய், சத்யராஜ், மகேஷ் பாபு ஆகியோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்களில் நடிகர் சத்யராஜ் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று நடிகை திரிஷா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இந்த சந்தோஷமான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முதன்முறையாக நெகடிவ் என்கிற வார்த்தையை கேட்டு மிகுந்த உற்சாகம் அடைந்ததாக தெரிவித்துள்ள திரிஷா, தான் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது 2022-ம் ஆண்டை சந்திக்க தான் தயாராகி விட்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை திரிஷா தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் ராம் என்கிற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள தான் அவர் லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை நடிகை திரிஷா கைவசம் வைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!