Tamannaah Bhatia: பிரபல நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் தமன்னா!

Published : Mar 19, 2025, 09:49 PM IST
Tamannaah Bhatia: பிரபல நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் தமன்னா!

சுருக்கம்

பிரபல நடிகையின் பயோ பிக் படத்தில், நடிக்க விருப்பம் உள்ளதாக தமன்னா கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னாவை, பாகுபலி திரைப்படம் உலக அளவில் பிரபலமாக்கியது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் தமன்னா தற்போது பான் இந்தியா மொழியில் உருவாகும் ஓடிலா படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன், ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவரின் மகள் குஷி கபூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, தனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் எப்போதும் என்னால் நடிக்க முடியாது என்று கூறிய நிலையில் தமன்னா இப்படி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமன்னாவிடம், நீங்கள் எந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் "ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது, அவர் ஒரு சூப்பர் ஐகான். நான் எப்போதும் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்" என்று தமன்னா ஐஏஎன்எஸ் இடம் கூறினார். 

Tamannaah Breakup: விஜய் வர்மா இப்படி செய்தாரா? தமன்னா பிரேக்கப்புக்கு என்ன காரணம் - தீயாய் பரவும் தகவல்!

சமீபத்தில் தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய குஷி கபூர், தனது அம்மாவாக நடிக்க 100 வருடங்கள் ஆனாலும் தனக்கு முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், ஸ்ரீதேவி நடித்த கடைசி படமான 'மாம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் குஷி கபூர் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பித்தக்கது.

குஷியின் நடிப்பில்,  'லவ்யாப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு போனி கபூர் இதை உறுதிப்படுத்தினார். தி ஆர்க்கீஸ், லவ்யாப், மற்றும் சமீபத்தில் வெளியான நதானியன் ஆகியவை குஷியின் முந்தைய படங்கள். ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமான படம் லவ்யாப், அதே நேரத்தில் இப்ராஹிம் அலிகானின் பாலிவுட் அறிமுக படம் நதானியன் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!