விபச்சார வழக்கில் கைதான தமிழ் நடிகை... திருமணம் செய்துகொண்ட மும்பை தயாரிப்பாளர்...

Published : Dec 15, 2018, 10:27 AM IST
விபச்சார வழக்கில் கைதான தமிழ் நடிகை... திருமணம் செய்துகொண்ட மும்பை தயாரிப்பாளர்...

சுருக்கம்

விபச்சார வழக்கில் கைதாகி சிறை சென்ற நடிகை ஸ்வேதா பாசுவை நேற்று ஒரு மும்பை தயாரிப்பாளர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இச்செய்தி பாலுவுட்டில் பரபரப்பாகியுள்ளது.  

விபச்சார வழக்கில் கைதாகி சிறை சென்ற நடிகை ஸ்வேதா பாசுவை நேற்று ஒரு மும்பை தயாரிப்பாளர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இச்செய்தி பாலுவுட்டில் பரபரப்பாகியுள்ளது.

இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஸ்வேதா பாசு. மும்பையை சேர்ந்த இவர் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். மக்டே எனும் இந்திப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஸ்வேதா நடித்தார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஆனார். 

பின்னர் தமிழ் திரையுலகிற்கும் ஸ்வேதா அறிமுகம் ஆனார். தமிழில் ‘ராரா’, ‘ஒரு முத்தம்  ஒரு யுத்தம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களிலும் நடித்தார். இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போலீசார் ரெய்டு சென்றனர். அப்போது அறையில் வாடிக்கையாளர் ஒருவருடன் பாலியல் தொழில் செய்து கொண்டிருந்ததாக ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதா பாசுவை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு நீதிபதி அனுப்பி உத்தரவிட்டார். இதன் பிறகு அங்கு சில நாட்கள் இருந்த ஸ்வேதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. விபச்சார வழக்கை தொடர்ந்து நடத்திய ஸ்வேதா அந்த வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுதலை பெற்றார். ஸ்வேதா விபச்சாரம் செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி கூறினார்.

   இந்த சர்ச்சைக்கு பிறகு ஸ்வேதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் ஸ்வேதா பிசியானார். இந்த நிலையில் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரோஹித் மிட்டலுடன் ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தாங்கள் 5 வருடங்களாக காதலித்து வருவதாக ஸ்வேதாக கூறியிருந்தார். இந்த நிலையில் மும்பையில் ஸ்வேதா – ரோஹன் திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

காதலியான நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளரான ரோஹன் ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்த பலரும் இதனை குறிப்பிட்டு ரோஹனை பாராட்டிச் சென்றனர். ஸ்வேதா – ரோஹன் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!