விவாகரத்து முடிவா? திருமண புகைப்படங்களை நீக்கியது குறித்து பதிலளித்த நடிகை சுவாதி!

Published : Apr 21, 2020, 12:32 PM ISTUpdated : Apr 21, 2020, 12:33 PM IST
விவாகரத்து முடிவா?  திருமண புகைப்படங்களை நீக்கியது குறித்து பதிலளித்த நடிகை சுவாதி!

சுருக்கம்

'டேஞ்சர்' என்கிற தெலுங்கு படத்தில் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய, சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.  

'டேஞ்சர்' என்கிற தெலுங்கு படத்தில் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுவாதி ரெட்டி. இதை தொடர்ந்து தமிழில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இயக்குனர் சசிகுமார் நடித்து இயக்கிய, சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.

முதல் படத்திலேயே... துரு துரு பார்வையால் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் சுவாதி. இந்த படத்தை தொடர்ந்து, போராளி, இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை,ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த போதிலும், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால், 2018 ஆம் ஆண்டு, விமானி விகாஷ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் சமீப காலமாக மீண்டும் மலையாளம் மாற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் சுவாதி.

இந்நிலையில், சுவாதி ரெட்டி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, திருமண புகைப்படங்களை திடீர் என நீக்கினார். இதனால் நடிகை சுவாதிக்கும், அவருடைய கணவர் விகாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் ஒரு தகவல் பற்றி எரிந்தது.

இந்நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹார்ரி பாட்டர் மற்றும் டாபி  கதாபாத்திரங்கள் பேசுவது போல் பதில் கொடுத்துள்ளார். அதாவது எதை எங்கு வைக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும், பர்சனல் விஷயங்களை சேமிக்க தனியாக ஒரு போல்டர் போட்டு அதில் திருமண புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளாராம். இந்த வீடியோ மூலம்... விவாகரத்து வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் சுவாதி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?