Sunny Leone : ஆண்டவருக்கே போட்டியா? Quotation Gang படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சன்னி லியோனே - என்ன அது?

Ansgar R |  
Published : Jun 03, 2024, 07:31 PM IST
Sunny Leone : ஆண்டவருக்கே போட்டியா? Quotation Gang படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சன்னி லியோனே - என்ன அது?

சுருக்கம்

Actress Sunny Leone : பிரபல நடிகை சன்னி லியோனே நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Quotation Gang. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர். 

கனடாவில் பிறந்த பிரபல நடிகை சன்னி லியோனே, கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உலகில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வரும் அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வடகறி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் "ஓ மை கோஸ்ட்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த சன்னி லியோனே. அவர் நடிப்பில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒரு மலையாள திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

நடிச்ச படங்கள் ரூ. 1300 கோடி நஷ்டம்.. ஆனா சூப்பர் ஸ்டார் அந்தஸ்து மட்டும் போகல.. யாருப்பா அவரு.?

அடுத்தபடியாக இந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டில் எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கன்னடம், ஹிந்தி மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் நடித்து முடித்துள்ளா "Quotation Gang" என்கின்ற திரைப்படம் விரைவில் உலக அளவில் வெளியாக உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளிவரும் நிலையில் சன்னி லியோனேவின் "Quotation Gang" திரைப்படமும் அதே ஜூலை மாதம் வெளியாக உள்ளது. எனவே இந்தியன் 2 திரைப்படத்தோடு போட்டியாக தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அந்த திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியாமணி, மூத்த நடிகர் ஜாக்கி சரஃப் மற்றும் இளம் நடிகை சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். 

ரேஷ்மா முரளிதரன் - ஆகாஷ் நடிக்கும் 'நெஞ்சத்தை கிள்ளாதே' சீரியல் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது! வைரல் போட்டோஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?