
சமீபத்தில் நடிகை ரித்விகா, கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதி மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் அவரை தொடர்ந்து 'காதலில் விழுந்தேன்', 'வம்சம்', 'மாசிலாமணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுனைனா, பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸில்அதிகம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
இவரிடம் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சினிமாவில் எந்த ஹீரோ மீது உங்களுக்கு முதலில் ஈர்ப்பு ஏற்பட்டது என அந்த ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த சுனேனா பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீதுதான் முதலில் கிரஷ் வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான நடிகர் மீது கிரிஷ் உள்ளதாக நடிகை ரித்விகா கூறியதை தொடர்ந்து, அவரையும் மிஞ்சி திருமணமாகி, விவாகரத்தான நடிகர் மீது தான் தன்னுடைய முதல் கிரஷ் என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுனைனா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.