57 வயதில்... 43 ஆண்டுகளுக்கு பின்... கணவருக்கு முன் பாரத நாட்டியம் ஆடிய நடிகை சுஹாசினி!

By manimegalai aFirst Published Feb 21, 2019, 1:11 PM IST
Highlights

80 களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சாருஹாசனின் மகள் சுஹாசினி.  
நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தது மட்டும் இன்றி,  தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை தமிழ் திரையுலகில் நிரூபித்துள்ளார்.

80 களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சாருஹாசனின் மகள் சுஹாசினி.  
நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தது மட்டும் இன்றி,  தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை தமிழ் திரையுலகில் நிரூபித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'பாலைவனச்சோலை', 'சிந்து பைரவி', ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.  1988 -ல்  இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இவர் 43 வருடங்களுக்குப் பின் மீண்டும் மேடையில் பரதம் ஆடியுள்ளார்.  நடிகை சுஹாசினி இதற்கு முன் 1976-ல் அதாவது அவர்களுடைய 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தார். அதையடுத்து சில மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். அவர் சினிமாவில் நடிகையாக மாறிய பின் அவரால் மேடைகளில் பரதநாட்டியம் ஆட முடியவில்லை.

தற்போது தன்னுடைய 57 வயதில், 43 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அவருடைய கணவரும் இயக்குனருமான மணிரத்னம்,  லக்ஷ்மி வைத்தியநாதன், பத்மா சுப்ரமணியம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பரதம் ஆடியுள்ளார். 

இவருக்கு சண்முக சுந்தரம் என்பவர் பரதநாட்டிய பயிற்சி அளித்துள்ளார். சுஹாசினியின் முதல் அரங்கேற்றத்தின் போது,  அவருக்கு மேக்கப் போட்ட சேதுமாதவன் என்பவர் இப்போதும் அவருக்கு மேக்கப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!