விக்ரம் கோஷ்டிகளை பழிவாங்க அவசரமாக ஷூட்டிங் கிளம்பும் இயக்குநர் பாலா...டென்சனில் சீயான்...

Published : Feb 21, 2019, 12:42 PM IST
விக்ரம் கோஷ்டிகளை பழிவாங்க அவசரமாக ஷூட்டிங் கிளம்பும் இயக்குநர் பாலா...டென்சனில் சீயான்...

சுருக்கம்

தனது மகனின் பிரஸ்டீஜ் பிரச்சினைக்காக புதிதாகத் துவங்கவிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்துக்கு பிரபல இயக்குநர்கள் யாரும் தேவையில்லை என்ற முடிவை  எடுத்திருக்கும் விக்ரம் படத்தின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் முடிவில் இருக்கிறாராம்.

தனது மகனின் பிரஸ்டீஜ் பிரச்சினைக்காக புதிதாகத் துவங்கவிருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்துக்கு பிரபல இயக்குநர்கள் யாரும் தேவையில்லை என்ற முடிவை  எடுத்திருக்கும் விக்ரம் படத்தின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் முடிவில் இருக்கிறாராம்.

இரு தினங்களுக்கு புதிய டைட்டில் அறிவிக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படத்துக்கு பல இயக்குநர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டபோது, அவர்கள் யாரும் வேண்டாம் ஒரிஜினல் தெலுங்குப் படத்தில்பணியாற்றிய கோ-டைரக்டர் கிரிஷய்யாவே போதும். மற்ற எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் விக்ரம் சொல்லிவிட்டாராம். இதனாலேயே ஹீரோயின், ஒளிப்பதிவாளர் அறிவிப்புக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் எதுவும் இயக்குநர் அறிவிப்புக்கு வழங்கப்படவில்லை.

புதிய வர்மாவுக்கு கேமரா மேன் ரவி.கே.சந்திரனை ஒப்பந்தம் செய்தது முதல் படம் தொடர்பான அத்தனை முடிவுகளையும் விக்ரமே எடுக்கிறாராம். ஷூட்டிங்கின்போதும் அனைத்திலும் முன்னணியில் விக்ரமே இருப்பார். படத்திலிருந்து வெளியேறும்போது ‘நான் உண்மைகளைப் பேசினால் அது விக்ரம் மகன் துருவ்வின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ‘என்று பாலா சொன்னது அவர் சரியாக நடிக்கவில்லை என்ற அர்த்தத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மிகவும் நொந்துபோயிருக்கும் விக்ரம், இந்த புதிய ‘ஆதித்ய வர்மா’வுக்கு சில கோடிகளையும் கொட்ட வேண்டியிருப்பதால் விரக்தி ,டென்சன், வெறியுடனே வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் புதிய படம் தொடங்கியிருக்கும் இயக்குநர் பாலா, விக்ரம் கோஷ்டிகளின் ‘ஆதித்ய வர்மா’ ரிலீஸாகும் அதே தேதியில் தனது படத்தை ரிலீஸ் செய்து பழி தீர்க்கக் காத்திருக்கிறார்.அதனாலேயே அவசர அவசரமாக படப்பிடிப்புக்குக் கிளம்புகிறார் என்று சிலர் கொளுத்திப்போட்டிருக்கும் செய்தியாலும் டென்சனின் உச்சத்தில் இருக்கிறார் விக்ரம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!