’உதயநிதி ஸ்டாலினை பார்த்தது கூட இல்லை’...ஸ்ரீ ரெட்டி அந்தர் பல்டி...

Published : Nov 16, 2019, 12:47 PM IST
’உதயநிதி ஸ்டாலினை பார்த்தது கூட இல்லை’...ஸ்ரீ ரெட்டி அந்தர் பல்டி...

சுருக்கம்

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரையும் குறித்து சர்ச்சையான பதிவுகள் போட்டு தொடர்ந்து வம்பிழுத்துவரும் நடிகை ஸ்ரீரெட்டி நேற்று உதயநிதி ஸ்டாலின் குறித்து மிகவும் கொச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டு அது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார். 

சக நடிகர்கள் பற்றி அவதூறுகள் பேசியே பிரபலமாகி வந்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி நடிகரும், திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட பதிவு தொடர்பாக படு பயங்கர அந்தர்பல்டி அடித்துள்ளார். நேற்றுவரை ‘தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்’என்று கூறிவந்தவர் இன்று நான் நேரில் கூடப் பார்த்ததில்லை’என்று அலறியிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரையும் குறித்து சர்ச்சையான பதிவுகள் போட்டு தொடர்ந்து வம்பிழுத்துவரும் நடிகை ஸ்ரீரெட்டி நேற்று உதயநிதி ஸ்டாலின் குறித்து மிகவும் கொச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டு அது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார். அப்பதிவுகள் கண்டு திமுகவின் உடன் பிறப்புகள் கொந்தளிப்பு அடைந்திருந்த நிலையில், நடுவில் ‘நடக்கவேண்டியது நன்றாகவே நடந்து விட்டது போல் தெரிகிறது. இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அப்படியே தலைகீழ் பல்டி அடித்த ஸ்ரீரெட்டி தான் இதுவரை உதயநிதி ஸ்டாலினைப் பார்த்தது கூட இல்லை’என்கிறார்.

இன்று காலை பிரசாத் லேப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய அவர்,’உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை. போலியான கணக்கு, உதயநிதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்யும் யாரோ என்னை இந்த வம்பில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்.நான் மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்’என்று உளறிக்கொட்டுகிறார் அவர்.

ஸ்ரீரெட்டியின் திடீர் பல்டி நடந்தது என்ன? என்ற தலைப்பில் தொலைக்காட்சி விவாதம் நடத்தினால் செம ஹாட்டாக இருக்கும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!