80 களில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடிகை ஸ்ரீபிரியா. குறிப்பாக அப்போது டாப் ஹீரோக்களாக இருந்த, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்களில் நடித்து, பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அப்போதைய முன்னணி கதாநாயகிகளான ஸ்ரீதேவி, ராதிகா, ராதா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு செம டஃப் கொடுத்தவர். முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தற்போது நாகார்ஜுன் என்கிற மகனும், சினேகா என்கிற மகளும் உள்ளனர். அம்மா அப்பா இருவருமே நடிகராக இருந்த போதிலும், நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகன் என இருவருமே திரையுலகில் பெரிதாக கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர்.
குறிப்பாக, ஸ்ரீப்ரியாவின் மகளின் அழகுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்த போதிலும், மிகப்பெரிய வழக்கறிஞராக சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என கூறி வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
1996ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த சினேகா, தனது கல்லூரி படிப்பை லண்டனில் படித்தார். அங்கு வழக்கறிஞர் துறையில் பட்டம்பெற்று ஒரு வழக்கறிஞராக தற்போது பணியாற்றி வருகிறார். இவரின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.