Sri Reddy : பிரபல நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் விஷால் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று பிரபல நடிகர் மற்றும் தமிழ் திரைப்பட சங்க தலைவர் விஷால் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது கேரள திரைப்பட உலகில் நடந்து வரும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது..
"அட்ஜஸ்ட்மென்ட் என்று ஒரு நடிகையை யார் அணுகினாலும், அவர்களை செருப்பால் அடியுங்கள். அந்த துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் வரவேண்டும். தமிழ் திரை உலகை பொறுத்தவரை, அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கப்படவே இல்லை என்று சொல்ல முடியாது. காலம் காலமாக இது குறித்து நிறைய புகார்களும் இருக்கிறது".
கூலி படத்தின் "DISCO".. அதில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? நெட்டிசன்களின் கணிப்பு உண்மையா?
"ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் புகார்கள் எதுவுமே இல்லை. இருப்பினும் அந்த வகையான புகார்களை விசாரிக்க 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்க இப்பொழுது திட்டமிட்டுள்ளோம், விரைவில் அது குறித்த அறிக்கை வரும்" என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். பல்வேறு தரப்பினரும் இதற்கு மிகுந்த வரவேற்பை தெரிவித்தும் வந்தனர்.
ஆனால் இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி, காட்டமான ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கத்திலேயே விஷாலை பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்று கூறி தனது பதிவை ஆரம்பித்த அவர் "வெள்ளை முடி வந்துவிட்ட அங்கிள், பெண்களைப் பற்றி பேசும் பொழுது உங்கள் நாவை அடக்கி பேசுங்கள்".
"மீடியாவிற்கு முன் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும், பெண்களைப் பற்றி நீங்கள் உபயோகப்படுத்தும் இழிவான சொற்கள் கண்டிக்கத்தக்கது. இந்த உலகத்திற்கு தெரியும் நீங்கள் ஒரு மிகப்பெரிய பிராடு என்று. மரியாதை உள்ள நபர் என்று உங்களை நீங்களே நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏற்கனவே நீங்கள் ஒரு பைத்தியம் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளீர்கள்".
Hi mr.womaniser &white hair very old uncle,when you are talking about a woman ,I think your tongue 👅 should be very careful in front of the media..the way u use a filthy language about a lady,the way you shiver ,the way you create problems to the good people everyone knows..you…
— Sri Reddy (@SriReddyTalks)"உங்களுடைய வாழ்க்கையில் உங்களோடு இருந்த பெண்கள் அனைவருமே உங்களை விட்டு சென்றுவிட்டனர். உங்களுக்கு நிச்சயம் நடந்து, பின் அது ரத்த அழுவதற்கு என்ன காரணம்?. இப்படி பல கேள்விகள் இருக்கிறது, அதற்கெல்லாம் உங்களால் பதில் கூற முடியுமா? நீங்கள் நடிகர் சங்கத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. "கர்மா" நிச்சயம் உங்களை பின்தொடர்ந்து வரும். என்னிடம் நிறைய செருப்புகள் இருக்கிறது, உங்களுக்கு அதில் ஒன்று வேண்டுமா?" என்று அந்த பதிவை முடித்திருக்கிறார்.
காற்று வாங்கும் மாடர்ன் உடை.. கவர்ச்சியில் தாராளம் காட்டும் வேதிகா - ஹாட் பிக்ஸ்!