பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமா உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீ திவ்யா! அதிரவைக்கு உண்மை!

By manimegalai a  |  First Published Apr 25, 2020, 4:56 PM IST

தெலுங்கில், 'ஹனுமான் ஜங்க்ஷன் ' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
 


நடிகை ஸ்ரீதிவ்யா:

தெலுங்கில், 'ஹனுமான் ஜங்க்ஷன் ' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

நாயகி அவதாரம்:

இதை தொடர்ந்து தெலுங்கில், 'மனசார' என்கிற படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயகியாக மாறினார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தமிழில் அறிமுகம்:

தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.

சரிவை சந்தித்த ஸ்ரீதிவ்யா:

ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது . இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் நடித்த 'சங்கிலி புங்கிலி கதவை தொர ' படம் தான் வெளியாகியது.

முயற்சி:

2017 ஆம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து மூன்று வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது, 'ஒத்தைக்கு ஒத்தை' மற்றும் விக்ரம் பிரபு நடிக்க உள்ள, ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 

ஸ்ரீதிவ்யாவின் மறுபக்கம்:

சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதிவ்யா, கதாநாயகியாக வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அதன் படி, மிகவும் ஆபாசமான உடைகள் அணிந்தபடி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை கூட வெளியிட்டார்.

ஆனால் இவருக்கு, அவர் அணிந்து எடுத்த உடைகள் கவர்ச்சியாக இல்லாமல் ஆபாசத்தை வெளிப்படுத்துவது போல் இருந்ததால், ஆரம்ப நாட்களில் பல படங்களில் நிராகரிக்க பட்டுள்ளார். 

பின் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தியதால், தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். ஆனால் இதுவரை இவரால் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய அவரின் சில புகைப்படங்கள் இதோ:

click me!