ஸ்டாக்கோட சேர்த்து வைரஸையும் வாங்கிடுவாங்க போல இருக்கே.! தலையில் அடித்து கொண்ட வெங்கட் பிரபு!

By manimegalai aFirst Published Apr 25, 2020, 4:17 PM IST
Highlights

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம்  அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஐ எட்டியிருக்கும் நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர். 
 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம்  அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஐ எட்டியிருக்கும் நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர். 

அதே போல் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதன் மூலம் தற்போது தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,775 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 22 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தமிழகத்தில் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட இருக்கிறது.  சென்னையை சுற்றி இருக்கும் நகரங்களில்  என பல்வேறு இடங்களிலும் 26ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம புற பகுதிகளில் நோய் தொற்று கட்டுக்குள் இருந்த போதும் மக்கள் நெருக்கமாக வாழும் பெருநகரங்களில் வைரஸ் நோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருப்பதால் மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

இதனிடையே சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கும் நிலையில்,  இன்று மாலை 3 மணி வரை காய்கறி, மளிகை போன்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 

இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் காய் கறிகளை வாங்கி சேமித்து வைத்து கொள்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே சென்னையில் தான் நாளுக்கு நாள், கொரோனாவினால் பலர் பாதிக்க பட்டு வரும் நிலையில், சமூக இடைவெளி, மற்றும் மாஸ்குகள் கூட அணியாமல், காய் கறி வாங்க மக்கள் அலைமோதி கொண்டனர்.

Why so much panic in chennai!!? For a four days strict lock down ku stock oda serthu virus um vaangiduvaanga pola irrukey!! 🤦🏽‍♂️ 4 naalum biriyani samaika porangalo?!? 🤔 keep calm!! Idhuvum kadandhu pogum! Panic is not good!! pic.twitter.com/BbubQ9JVWH

— venkat prabhu (@vp_offl)

 

இதனை சுட்டி காட்டும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு தலையில் அடித்து கொண்டு, ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், ஏன் சென்னையில் இவ்வளவு பதற்றம்? நான்கு நாள் முழு ஊரடங்கிற்கு ஸ்டாக்குடன் சேர்த்து வைரஸையும் வாங்கி சென்று விடுவார்கள் போல் இருக்கே! என தலையில் அடித்து கொண்டு, நான்கு நாட்களும் பிரியாணி செய்ய போறாங்களோ.. என கேட்டுள்ளார். மேலும் இவரை தொடர்ந்து பலரும். மக்கள் இதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் கூடியதற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!