இனி நடிகை சினேகா நடிப்பது சந்தேகமா? மூடி மறைத்த விஷயம் வெளியே கசிந்தது!

Published : Aug 22, 2019, 11:54 AM IST
இனி நடிகை சினேகா நடிப்பது சந்தேகமா? மூடி மறைத்த விஷயம் வெளியே கசிந்தது!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், நட்சத்திர ஜோடியாக வலம் வரும் தம்பதிகளில் ஒருவர் நடிகை சினேகா - பிரசன்னா ஜோடிகள். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது மீண்டும் சினேகா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியே கசிந்தால், இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.  

தமிழில் 'என்னவளே' படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிப்பழகி சினேகா. இவரின் அழகும், அமைதியான நடிப்பும் ஒரு சில படங்களிலேயே இவரை முன்னணி நடிகையாக ரசிகர்கள் முன் நிலை நிறுத்தியது.

முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடன் நடித்த இவர், பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். 

கடந்த ஓரிரு வாரத்திற்கு முன், இவர் பாஞ்சாலியாக நடித்த 'குருஷேத்திர' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மஹாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிரமாண்ட படம்.

இதனால் தொடர்ந்து நடிகை சினேகா, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை சினேகா, மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் சினேகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துவது சந்தேகம் தான்.

மேலும் இப்படி வெளியாகியுள்ள தகவல் குறித்து சினேகா - பிரசன்னா இருவருமே வாய் திரைக்கதை நிலையில், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா ஜோடிகள் என்ன சொல்வார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்