
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கடந்த 2 நாட்களுக்கு முன், ஆகஸ்ட் 9 ஆம் தேதி, தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார். எனினும் இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் #HBDMaheshbabu என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கி விட்டனர். இது 40 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டுகள் இடம்பெற்று சாதனை படைத்தது.
மேலும் மகேஷ் பாபு அனைத்து பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்றார். இதன் மூலம் பிரபலம் ஒருவர் மரக்கன்று நட்டு விட்டு, அந்த புகைப்படத்தை வெளியிட்டு மூன்று பிரபலங்களுக்கு இதுபோல் செய்து முடிக்க சவால் விட வேண்டும்.
இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பங்கேற்ற மகேஷ் பாபு. இதை விடபிறந்தநாளை கொண்டாட சிறந்த வழி கிடையாது. இந்த சவாலை நான் ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாக கூறினார்.
இவர் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான, விஜய்க்கு இந்த சவாலை விட்டதால், இவர் இதனை ஏற்று செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று, நேற்று நடிகர் விஜய் கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்று, அவர் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்ட, புகைப்படத்தை வெளியிட்டார்.
கிரீன் இந்தியா தான் சிறந்த வலிமை, மரம் நாடும் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். தளபதியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது தளபதி விஜய்யை தொடர்ந்து, மகேஷ் பாபு சவாலை நடிகை சுருதிஹாசன் நிறைவேற்றியுள்ளார்.
மரம் நடும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் தன்னுடைய பெயரை நாமினேட் செய்ததற்கு நன்றி என கூறி, இவர் இந்த சவாலை மூன்று பேருக்கு விட்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், புது மாப்பிள்ளை ராணா, மற்றும் தமன்னா ஆகியோருக்கு விட்டுள்ளார். சுருதி போல அவர்களும் சமத்தாக இந்த சவாலை ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.