அந்த வீடியோவில் பாத்திரம் கழுவும் தனது கணவர் ஆண்ட்ரேய்க்கு நச்சுன்னு முத்தம் கொடுத்துள்ள ஸ்ரேயா.
"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரேயா, வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா மீண்டும், திரையில் அதகளம் செய்ய உள்ளார். தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ள ஸ்ரேயா, தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடி வருகிறார். இவரது நடிப்பில் நரகாசூரன், சண்டைக்காரி ஆகிய படங்கள் தயாராகியுள்ளன.
இதையும் படிங்க:
அவ்வப்போது கணவருக்கு ஹாட் கிஸ் கொடுக்கும் ஸ்ரேயா அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் இந்த சூழ்நிலையில், ஸ்ரேயா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
A post shared by Shriya Saran (@shriya_saran1109) on Apr 2, 2020 at 3:52am PDT
இதையும் படிங்க: டூ பீஸில் குதிரை சவாரி... நெருப்பே இல்லாமல் இணையத்தை சூடேற்றிய கவர்ச்சி கன்னி சன்னி லியோன்...!
அந்த வீடியோவில் பாத்திரம் கழுவும் தனது கணவர் ஆண்ட்ரேய்க்கு நச்சுன்னு முத்தம் கொடுத்துள்ள ஸ்ரேயா. இதே மாதிரி மனைவிக்கு உதவும் வீடியோக்களை பதிவிடுங்கள் என ஆர்யா, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூன் உள்ளிட்ட சிலருக்கு சவால் விடுத்துள்ளார்.