
மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ''விக்ரம் வேதா'' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் 'யாஞ்சி, யாஞ்சி' பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது.
இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ''நேர்கொண்ட பார்வை'' படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த 'ஐர்சி' படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.சினிமாவில் பெரிய அளவிற்கு கிளாமர் காட்டாவிட்டாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு அடிக்கடி விமான பயணம் மேற்கொண்டவர்கள் சில நாட்களுக்கு வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்று கர்நாடகாவில் உள்ள தனது வீட்டில் நல்ல பிள்ளையாக அம்மாவுடன் தஞ்சம் புகுந்துவிட்டார்.
இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!
இந்நிலையில் அவர் சட்டக்கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது பேருந்து பயணங்களில் கிடைத்த திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்."சட்டக் கல்லூரியில் படித்த போது, பேருந்துகளில் பயணம் செய்தேன். குறிப்பாக கூட்டமான பேருந்துகளை நான் முற்றிலும் வெறுத்தேன். ஏனென்றால் கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்துகளில் பயணிப்பது போருக்கு செல்வது போன்று இருக்கும்"
இதையும் படிங்க: தளபதி விஜய் மகனா இது?... அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே... வைரல் போட்டோ...!
அப்படி கூட்ட நெரிசலில் செல்லும் போது யாராவது நம்மிடம் சில்மிஷம் செய்வார்களோ என்று மிகுந்த பயத்துடன் இருந்தேன். அதனால் கூட்டம் நிறைந்த பஸ்களை ஒன்றான் பின் ஒன்றாக தவிர்த்தேன். ஆனால் நான் கல்லூரிக்கும், வீட்டிற்கும் செல்ல பேருந்து தேவை. அதனால் கூட்டமே இல்லாத தனியார் பேருந்துகளில் பயணிக்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போது தனியார் பேருந்துகளை பார்க்கும் போதும் பழைய பயம் தொற்றிக்கொள்கிறது.
இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
நிர்பயா வழக்கு தொடர்பான வெப் சீரிஸைப் பார்த்த ஷ்ரத்தா தாஸ் தனக்கு கூட்டமான பேருந்துகளில் கிடைத்த திகில் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.