மேடையில் ஆடிய வாரிசு நடிகை.. அருவருக்கத்தக்க செய்கையை செய்த மோகன்லால்!

By Ansgar R  |  First Published Sep 1, 2024, 10:37 PM IST

Actor Mohanlal : பிரபல நடிகர் மோகன்லால் செய்த ஒரு தவறான செய்கை குறித்து பிரபல நடிகை ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.


சுமார் 223 பக்கங்கள் கொண்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அளித்த பரபரப்பு அறிக்கை, இப்போது மலையாள திரையுலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட மலையாள திரை உலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது, எட்டுக்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பிரபல மலையாள திரை உலக நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், முகேஷ் போன்றவர்கள், மற்றும் இயக்குனர்கள் சிலரும் இந்த பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை பெரிதான நிலையில், சில தினங்களுக்கு முன்பு கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்த உறுப்பினர்கள் 17 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதில் அந்த சங்கத்தின் தலைவர் மோகன்லாலும் அடங்குவார்.

Tap to resize

Latest Videos

undefined

ரஜினி, கமலுடன் நடித்த ஹீரோயின் இவர்தானா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

கேரள திரையுலகில் நடந்து வரும் இந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ள நடிகர் மம்மூட்டி, இந்து கட்டாயம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணம். நிச்சயம் உரிய நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். அதே போல இந்த விஷயம் குறித்தியது பேசிய பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ப்ரித்விராஜ், அளிக்கப்பட்ட புகார்கள் நிரூபமானாகும் பட்சத்தில் நிச்சயம் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரம் தவறாக புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தால், புகார் அளித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.    

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார். "திரைப்படம் சார்ந்த விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது, அப்பொழுது பிரபல நடிகர் ஒருவரின் மகள் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே நடிகர் சித்திக் மற்றும் மூத்த நடிகர் மம்மூட்டி ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுவே அமர்ந்திருந்த நடிகர் மோகன்லால், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஒரு செய்கையை செய்தார். அந்த நொடியே மக்கள் அவர் மீது வைத்திருந்த அபிப்பிராயம் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களுடைய தவறுகள் ஒரு நாள் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்" என்று நடிகை சாந்தி வில்லியம்ஸ் கூறினார்.  

தெலுங்கு பிக் பாஸ்.. மாஜி மாமனாருக்கு உதவிய சமந்தா - ஒரு சுவாரசிய தகவல் இதோ!

click me!