நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்... சோகத்தில் துடிதுடிக்கும் குடும்பத்தினர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 24, 2020, 12:24 PM IST
Highlights

 தற்போது இவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த “நாயகன்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், இப்போது இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். என் படத்தில் அம்மாவாக நடிக்க சரண்யாவை புக் பண்ணுங்க அப்படின்னு பல ஹீரோக்களும் சொல்லும் அளவிற்கு காமெடி ப்ளஸ் சென்டிமெண்டில் வெளுத்து வாங்கி வருகிறார். தற்போது இவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சரண்யாவின் தந்தை ஏ.பி.ராஜ். இவர் மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். 1951ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை 65 படங்களை இயக்கியுள்ளார்.  ‘கண்ணூர் டீலக்ஸ்’, ‘டேஞ்சர் பிஸ்கட்’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘அக்னி சரம்’, ‘சூர்ய வம்சன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

 

 

இதையும் படிங்க: கொரோனாவிலிருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... கூட்டு பிரார்த்தனைக்கு கிடைத்த முழு வெற்றி...!

டேவிட் லீன் இயக்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் படமான “த பிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்” என்ற போர் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.பி.ராஜ், சென்னையில் நேற்று காலமானார். தற்போது 95 வயதாகும் இவருக்கு நடிகை சரண்யாவைத் தவிர, ஜெயபால், மனோஜ் என இரு மகன்கள் உள்ளனர். ஏ.பி.ராஜ் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

click me!