குடும்பஸ்தனாக முதல் பர்த்டே.. ஒட்டுமொத்த காதலை கொட்டித்தீர்த்த ஆசை மனைவி - ரெடின்னுக்காக சங்கீதா போட்ட பதிவு!

Ansgar R |  
Published : Dec 23, 2023, 11:50 AM IST
குடும்பஸ்தனாக முதல் பர்த்டே.. ஒட்டுமொத்த காதலை கொட்டித்தீர்த்த ஆசை மனைவி - ரெடின்னுக்காக சங்கீதா போட்ட பதிவு!

சுருக்கம்

Redin Kingsley Birthday : பிரபல வெள்ளித்திரை நடிகர் ரெடின் கிங்ஸ்லி அவர்களுக்கும், பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சங்கீதாவிற்கும் கடந்த டிசம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது.

பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சங்கீதா சென்னையில் கடந்த 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி பிறந்தவர். தற்பொழுது 45 வயதாகும் சங்கீதா மராத்திய மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழ் மொழியிலும் நடிக்க துவங்கினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் தற்பொழுது பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சின்னத்திரை நாடகங்களிலும் முன்னணி கதாபாத்திரம் ஏற்று தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கீதாவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சீரியல்களில் அவர் தொடர்ச்சியாக நடித்த வருகின்றார். 

"மீண்டு வரணும் தென் மாவட்டம்".. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவும் நிஷா - மனதார வாழ்த்தும் நெட்டிசன்கள்!

நடிகை சங்கீதாவுக்கு Shivhiya என்ற மகளும் உள்ளார்.  ரெடினை திருமணம் செய்யும் முன்வே அவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவருடைய முதல் கணவரின் பெயர் கிரிஷ். இவர்கள் இருவரும் இணைந்து பல ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாக சில குடும்ப பிரச்சனை காரணமாக சங்கீதா அவரது முதல் கணவரை பிரிந்தார்.

இப்பொது தனது கணவர் நடிகர் ரெடினுடன் தனது புதிய வாழ்க்கையை துவங்கியுள்ள சங்கீதா, குடும்பஸ்தனாக தனது முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடிய தனது கணவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். "கணவனாக நீங்கள் கொடுத்த அன்பையும், பாசத்தையும் என்னால் என்றும் மறக்க முடியாது.. இது போல் இன்னும் பல பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துகிறேன்.. என் அன்புக்கும், அமைதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!