40 வயதில் நடிகை சங்கவிக்கு இப்படி ஒரு வாய்ப்பா..! ஷாக்கில் நடிகைகள்...!

 
Published : Mar 15, 2018, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
40 வயதில் நடிகை சங்கவிக்கு இப்படி ஒரு வாய்ப்பா..! ஷாக்கில் நடிகைகள்...!

சுருக்கம்

actress sangavi commited new movie

நடிகை சங்கவி தல அஜித் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான 'அமராவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதைத்தொடந்து நடிகர் விஜயுடன் 'ரசிகன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, கன்னட, உள்ளிட்ட மொழிப் படங்களில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சங்கவி இளைய தளபதி விஜயுடன் மட்டும் 'விஷ்ணு', 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை', 'நிலவே வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவர்ச்சி:

நடிகை சங்கவி நடித்த படங்கள் வெற்றிபெற காரணம் இவர் கவர்ச்சியாக நடிப்பது என பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் இவர் கவர்ச்சியாக நடித்தாலும், கதைக்கும் கதாப்பாத்திரதிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்தார். 

திருமணம்:

சங்கவி 35 வயதை கடந்த பின் கடந்த 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்  ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களிலும், டிவி நிகழ்ச்சிகளையும் நடந்தி வந்த இவர் திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார்.

கொளஞ்சி:

இவர் திருமணத்திற்கு பின் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனியுடன் 'கொளஞ்சி' என்கிற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருந்தார். கடந்த ஆண்டே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே உள்ளது.

 

இந்த படத்தில் மிகவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம் சங்கவி. மேலும் இந்த படத்தை தொடர்ந்து மற்ற சில படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்புகள் வருகிறதாம். இதனால் எப்படியும் இந்த வருடம் தன்னுடைய அடுத்த படத்தை பற்றியும் சங்கவி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பல முன்னணி நடிகைகளுக்கு பட வாய்புகள் இல்லாத நிலையில், 40 வயதை கடந்த இவருக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ளது போன்ற கதைகள் அமைவதால் சக நடிகைகள் செம ஷாக்கில் உள்ளார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!