
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். திருமணத்திற்கு பின்பு,ம் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திருமணமான நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை என கோலிவுட் திரையுலகில் நிலவி வந்த பேச்சுகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியானது. ஆனால் இப்படம் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் வெற்றிபெற வில்லை என்பது வருத்தம்.
இந்த படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு கதால்' படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
தற்போது நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதால், இவர் கமிட் ஆகி இருந்த 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தெலுங்கு ஊடகங்கள் கிசுகிசுத்து வருகிறது.
ஏற்கனவே, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக பல வதந்திகள் வந்து ஓய்திருப்பதால், இதுவும் அது போன்ற வதந்தியா? அல்லது உண்மையில் நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அவரே வெளிப்படையாக கூறும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். மேலும் திடீர் என சமந்தா நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுத்திவது அவர்களுடைய ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.