அழகில் அசர வைக்கும் சாய் தன்ஷிகா... பட்டு பாவாடை, தாவணியில் டக்கர் போஸ்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!

Published : Nov 22, 2019, 05:35 PM ISTUpdated : Nov 22, 2019, 05:50 PM IST
அழகில் அசர வைக்கும் சாய் தன்ஷிகா... பட்டு பாவாடை, தாவணியில் டக்கர் போஸ்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!

சுருக்கம்

"உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா" என்பது போல தக தகவென மின்னும் தன்ஷிகா, பட்டுப் பாவாடை தாவணியில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கிறக்கடிக்க வைத்துள்ளது.

பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக  மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சிலம்பம் சுற்றுவதில் வல்லவரான சாய் தன்ஷிகா, தனது பிறந்தநாளின் போது சிலம்பம் சுற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, படவாய்ப்புகளை பெற முயற்சித்து வருகின்றன.

ஆனால் தமிழ் பெண் என்ற பெருமையை காக்கும் விதமாக அழகான சாய் தன்ஷிகா கவர்ச்சி இல்லாமல் ஹோம்லியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட்டுப்புடவை, சுடிதார் என அசத்திய சாய் தன்ஷிகா, இப்போது பட்டுப் பாவாடை, தாவணியில் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

 

இதையும் படிங்க: பிரபல நடிகை தன்சிகாவின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸ்... மனதை சொக்க வைக்கும் புகைப்படங்கள்...!

 

"உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா" என்பது போல தக தகவென மின்னும் தன்ஷிகா, பட்டுப் பாவாடை தாவணியில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கிறக்கடிக்க வைத்துள்ளது. தங்க மாம்பழம் போல ஜொலிக்கும் சாய் தன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!