
நடிகை இலியானா, நடிப்பில் நாளை 'பகல்பந்தி' என்கிற பாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நடிகை இலியானா தன்னுடைய காதல் தோல்வியால் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
இலியானா சில வருடங்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஆண்ட்ரு என்கிற புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவ்வப்போது, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரு எடுத்த தன்னுடைய புகைப்படங்களையும், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதால், பிரிந்து விட்டதாக கூறினார். இந்நிலையில் காதல் தோல்வியால் இலியானா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரே ஒரு பெட்டியில் கூறியிருந்தார் என்பது நாம் அறிந்ததே.
மன அழுத்தத்திற்கான தொடர் சிகிச்சை பெற்றதாகவும், இதனால் ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாகவும் தற்போது கூறியுள்ளார். அதேபோல் அதிக மாத்திரைகள் உட்கொண்டால் உடல் எடை கூடியதாகவும், அதனால் ஜிம்முக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார் இலியானா. சிலர் தான் ஜிம்முக்கு சென்று வரும் புகை படங்களை தொடர்ந்து வெளியிட்டதால் இப்போது ஜிம்முக்கு செல்வத்தையும் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒருவழியாக காதல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள இலியானா, தி பிக் புல்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இலியானா தமிழியில் விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.