நடிகை ரோஜா இன்று விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானம் ஒன்றில் சென்றுள்ளார். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானத்தில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். 2002ம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணத்துக்கு சினிமாவுக்கு முழுக்கு போட்ட ரோஜா, அரசியலில் களமிறங்கினார்.
சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, தற்போது அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். ஆந்திர மாநிலத்தின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய அவர், தற்போது அம்மாநிலத்தின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
நடிகை ரோஜா இன்று விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு தனியார் விமானம் ஒன்றில் சென்றுள்ளார். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானத்தில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை அவசரமாக, பெங்களூருவில் தரையிறக்கி உள்ளார். விமானியின் துரிதமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்து ப்யணிகளை வெளியே விடாமல் 4 மணிநேரம் கதவு அடைக்கப்பட்டு இருந்ததாகவும், என்ன பிரச்சனை என்பதை விமானிகள் தெரிவிக்கவில்லை என்றும் நடிகை ரோஜா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.