பிரதமர் பற்றிய சர்ச்சை பேச்சு! செல்போன் எண்ணை பகிர்ந்து தகாத வார்த்தை பேசும் சிலர் அலறும் நடிகை ரோகிணி!

Published : Mar 11, 2019, 01:41 PM IST
பிரதமர் பற்றிய சர்ச்சை பேச்சு! செல்போன் எண்ணை பகிர்ந்து தகாத வார்த்தை பேசும் சிலர் அலறும் நடிகை ரோகிணி!

சுருக்கம்

நடிகை ரோகிணி பிரபல மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு,  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். "நரேந்திர மோடியிடம் சொல்வதற்கு தன்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்பது தான் என கூறினார்.  

மேலும் இப்படி ஒரு ஆட்சி நாட்டுக்கு தேவை இல்லை. 5  ஆண்டுகளாக இந்துத்துவாவை அதிகமாக பார்த்து விட்டோம். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை " என்று கூறினார்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியினர் ரோகிணியை வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அவரது சொல் போன் நம்பரையும் வெளியிட்டுள்ளனர். ரோகிணிக்கு ஆதரவாகவும் வலைதளத்தில் சிலர் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ரோகிணி , "மோடிக்கு எதிராக எனது கருத்தை,  கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், எனது எண்ணை பகிந்து தகாத விதமாக பேசுபவர்களின் பண்பு என்னவென்பது தெரிகிறது. வசவு சொற்கள் எல்லாமே பெண்ணையே மையப்படுத்தி இருப்பதையும் கவனிக்க வைக்கிறார்கள் என்று அலறி அடித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

படத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்; அனிருத் பற்றி தமன் ஆதங்கம்!
ரெஜினா கசாண்ட்ரா: முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?