
’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ பட ஹீரோ விமெல் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விமெலுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு நடிகர் விமல் தனது நண்பர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதே விடுதியில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்ததாகவும், அப்போது குடிபோதையில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாகி இருவரும் கட்டி உருண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களை தாக்கியதாக நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது 294பி என்ற குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விமல் தரப்பு சார்பிலும் காவல்நிலையத்தில் அபிஷேக் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.