
நடிகை ரெஜினா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் நடித்த முதல் தமிழ் படமான 'ரஜினி முருகன்' வெற்றி பெற்றாலும், இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு திரையுலகிற்கு சென்றார். அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்ததால், முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இதனால் சில தமிழ் இயக்குனர்களின் பார்வை இவர் மீது பட, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வந்தார்.
தற்போது தான் நடிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டவும் இவர் தயாராக உள்ளதால் இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.
தமிழ், தெலுங்கு, திரையுலகை தாண்டி ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான, Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்கிற ஹிந்தி படத்தில் நடிகை சோனம் கபூருக்கு ஓரின சேர்க்கை தோழியாக ரெஜினா நடித்துள்ளார்.
இதுகுறித்து தற்போது ரெஜினா கூறுகியில், இந்தியா முழுவதும் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளித்துவரும் நிலையில் என்னுடைய ஆதரவும் உண்டு. மேலும், என் நண்பர்களில் பலர் ஓரினசேர்க்கையாளர்கள் உள்ளனர். நாம் அவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தவறு என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.