இந்த சமயத்தில் சம்பளத்தை கோடிகளில் ஏற்றி தயாரிப்பாளர்கள் தலையில் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகில் நாயகியாக என்ட்ரியான ராஷ்மிகா மந்தனா, 2018ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் 100 கோடி கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலேறு நீக்கு எவ்வரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.
undefined
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்து நிற்கும் ராஷ்மிகா கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் ரசிகர்கள் செல்லமாக குட்டி நயன்தாரா என அழைக்கும் அளவிற்கு அவர்களது மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தளபதி விஜய்யின் 65வது படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வீட்டுக்குள் வித்தியாசமாக படுகவர்ச்சி போட்டோ ஷூட்... அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எல்லை மீறிய பிரபல நடிகை...!
தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகம் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும், போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். சரி ஓடிடி ரிலீஸாவது செய்து பணம் பார்க்கலாம் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். இப்படி ஒட்டுமொத்த சினிமாவும் அடுத்தடுத்து அடிவாங்கி வருகிறது.
இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!
இந்த பிரச்சனைகளில் இருந்து திரையுலகம் மீண்டு வர பல மாதங்கள் பிடிக்கும். இந்த சரிவில் இருந்து மீள்வதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சமயத்தில் சம்பளத்தை கோடிகளில் ஏற்றி தயாரிப்பாளர்கள் தலையில் மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதையும் படிங்க:
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா. லாக்டவுனுக்கு பிறகு ஒப்புக்கொள்ள உள்ள அனைத்து படத்திற்கும் சம்பளத்தை கணிசமாக உயர்த்த உள்ளாராம். இதுவரை தன்னை தொடர்பு கொள்ளும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பற்றி வாய் திறக்காத ராஷ்மிகா, லாக்டவுன் முடியட்டும் சம்பளம் பற்றி சொல்றேன் என்று மட்டும் பதிலளிக்கிறாராம். அடுத்து கமிட் ஆக உள்ள படங்களுக்கு சுமார் 1.5 கோடியில் இருந்து 2 கோடி வரை சம்பளத்தை ஏற்ற திட்டமிட்டிருக்கிறாராம்.