உறவினர்கள் - நண்பர்கள் இல்லாமல் நடிகை ரம்பா வீட்டில் நடந்த கொண்டாட்டம்! ஆச்சரியப்படுத்திய குழந்தைகள்!

Published : Apr 13, 2020, 02:03 PM IST
உறவினர்கள் - நண்பர்கள் இல்லாமல் நடிகை ரம்பா வீட்டில் நடந்த கொண்டாட்டம்! ஆச்சரியப்படுத்திய குழந்தைகள்!

சுருக்கம்

90 களில் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.  

90 களில் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.

இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு வந்தாலும், அவை அனைத்தையும் மீறி இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.


இவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ரம்பா, தன்னுடைய 10 ஆம் ஆண்டு திருமண நாளை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

தற்போது இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவின் காரணமாக நடிகை ரம்பாவின், 10 ஆம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று யாராலும் கலந்து கொள்ள முடியவில்லை.


இதனால், கேக் கூட வீட்டிலேயே செய்து... ரம்பா தன்னுடைய கணவர் குழந்தைகள் என மிகவும் எளிமையாக , இந்த வருட திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் தங்களுடைய 10 வருட காதல் இந்த கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்ததாகவும், கடையில் வாங்கும் கேக்கை விட மிகவும் நன்றாகவே இருந்ததாக கூறியுள்ளார். அதே போல் திருமண நாளில் குழந்தைகள் கொடுத்த பரிசு தங்களை ஆச்சர்யமடைய வைத்ததாக கூறி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.  தன்னுடைய திருமண நாள் கொண்டாட்டத்தின் வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரம்பா.



இவர் தன்னுடைய அழகிய குடும்பத்துடன் கொண்டாடியுள்ள இந்த திருமண நாள் கொண்டாட்டத்தை பார்த்து ரசிகர்களும், பிரபலங்களும் மாறி மாறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்