”நான் அடிச்ச அடியில அந்த நடிகர் நெஞ்சு வலி வந்து துடிச்சார்”...பகீர் கிளப்பும் தமிழ் நடிகை...

Published : Apr 26, 2019, 04:31 PM IST
”நான் அடிச்ச அடியில அந்த நடிகர் நெஞ்சு வலி வந்து துடிச்சார்”...பகீர் கிளப்பும் தமிழ் நடிகை...

சுருக்கம்

’பாக்க சைலண்டா இருந்தாலும் நான் கொஞ்சம் வயலண்டான பொண்ணு. காலேஜ் டேய்ஸ்ல பைக்குல போய்க்கிட்டே லந்து பண்ணுன ஒருத்தன நான் எட்டி மிதிச்ச்துல நடுரோட்டுல விழுந்து சில்லரை அள்ளுனான்’ என்று ரொம்பத்தான் பயமுறுத்துகிறார் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ பட நாயகி சாய் பிரியங்கா ருத்.

’பாக்க சைலண்டா இருந்தாலும் நான் கொஞ்சம் வயலண்டான பொண்ணு. காலேஜ் டேய்ஸ்ல பைக்குல போய்க்கிட்டே லந்து பண்ணுன ஒருத்தன நான் எட்டி மிதிச்ச்துல நடுரோட்டுல விழுந்து சில்லரை அள்ளுனான்’ என்று ரொம்பத்தான் பயமுறுத்துகிறார் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ பட நாயகி சாய் பிரியங்கா ருத்.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்த பிரியங்கா ருத்துக்கு முதல் படமே நயன்தாரா லெவல் சோலோ ஹீரோயின், அதிலும் ஒரு பெரும் தாதா கும்பலை ஒற்றைப் பெண்ணாக பழி வாங்கும் கேரக்டர் என்பதால் உடனே ரீச் ஆகிவிட்டார். ‘அதென்ன ருத் நீங்க நார்த் இந்தியாவா? என்றால் சிரிக்கிறார்.

‘நான் அசல் தமிழ்ப்பொண்ணு. கோயமுத்தூர்க்காரி. தமிழ் சினிமாவுல நிறைய பிரியங்காக்கள் இருக்கிறதால வீட்ல என்னை செல்லப்பெயரா கூப்பிடுற ருத் ஐயும் கூட சேர்த்துக்க்கிட்டேன். ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ பட வாய்ப்பு எனக்கு அவ்வளவு ஈஸியா ஒண்ணும் கிடைச்சிடலை. அந்தப்படத்தோட ஆடிசனுக்கு ஏகப்பட்ட பொண்ணுங்க வந்திருந்தாங்க. அதுல செலக்ட் ஆன சில பொண்ணுங்கள்ல நானும் ஒருத்தி. அப்புறமா தொடர்ச்சியா கொடுத்த சண்டைப்பயிற்சியில ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆக, கடைசி வரை தாக்குப் பிடிச்சதால நான் செலக்ட் ஆனேன்.

இந்தப் படத்தொட சண்டைக் காட்சிகளைப் பார்த்து எனக்கு எக்கச்சக்க பாராட்டுக்கள். காலேஜ் படிக்கிற காலத்துல இருந்தே நான் ரொம்ப போல்டான பொண்ணு. பைக்ல போய்க்கிட்டே லந்து குடுத்த ஒருத்தன விரட்டிப்போய் எட்டி மிதிச்சிருக்கேன். இந்தப்படத்துல கூட நிறைய ஒரிஜினல் அடி கொடுக்கவும் வாங்கவும் வேண்டி இருந்தது.வில்லனா நடிச்ச வேலு பிரபாகரன் சாரை அடிக்கவேண்டிய ஒரு காட்சியில் கொஞ்சம் வேகமா அடிச்சதுல நெஞ்சு வலி வந்து அவரை ஆஸ்பத்திரிக்கே தூக்கிட்டுப்போனாங்கன்னா பாருங்களேன்’என்று தொடர்ச்சியாக திகில் கிளப்புகிறார் பிரியங்கா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!