அமெரிக்க குழந்தைகள் படிப்பிற்கு உதவும் விஜய் பட நடிகை!

By manimegalai aFirst Published Apr 14, 2020, 3:08 PM IST
Highlights
பிரபல நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், அமெரிக்க குழந்தைகள் படிப்பிற்காக உதவிகள் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதால். அவருக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
 
பிரபல நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், அமெரிக்க குழந்தைகள் படிப்பிற்காக உதவிகள் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளதால். அவருக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா:

2000 ஆம் ஆண்டு, உலக அழகி பட்டம் வென்று பிரபலமானவர் பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இதை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகத்தில் ஒரு நடிகையாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினார். ஆரம்பமே அசத்தல் என்பது போல், இவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.


தமிழ் திரைப்படம்:
 
இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான, 2002 ஆண்டே தமிழில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து, இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், பாலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால், மற்ற தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

திருமணம்:



பாலிவுட் திரையுலகை தாண்டி, ஹாலிவுட் திரையுலகிலும் சூப்பர் கேர்ள் போன்ற சீரிஸில் நடித்த பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆண்டு, அவரை விட 10 வயது குறைவான அமெரிக்கா பாப் பாடகர், நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல்:



தற்போது அமெரிக்காவையும் அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, கடுமையான ஊரடங்கு உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடம் கற்கும் விதமாக ஆன்லைன் மூலம் அவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா சோப்ரா உதவி:


இந்நிலையில் வீட்டில் இப்படி பாடம் கற்கும் மாணவர்களுக்கு தான் பிரியங்கா சோப்ரா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த மோசமான நிலைமையை மக்கள் சமாளிப்பதற்கு அனைவரும் சேர்ந்து உதவிகள் செய்வது அவசியம். இளைஞர்கள் முன்னேற்றம், மற்றும் கல்வி ஆகிய இரண்டும் மிகவும் முக்கியம்.  எனவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகள், ஆன்லைன் கல்வி கற்க ஏதுவாக ஹெட்போன்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
   
click me!