
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோ, தற்போது முழுமையாக குணமடைந்து விட்டதாக கூறி தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, கோரோனோ பாதிப்பின் மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்ட் நடித்த, 'குவான்டம் ஆஃப் சொலேஸ்' படத்தில் நடித்ததன் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகை ஓல்கா குரிலென்கோ.
இந்நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விஷயம் ஹாலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது, ஓல்கா குரிலென்கோ விரைவில் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை கூறி வந்தனர்.
கடந்து மூன்று வாரமாக கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது பூரண குணம் அடைந்து விட்டதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓல்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.... “காய்ச்சல் மற்றும் கடும் தலைவலியால் ஒரு வாரம் முழுவதும் படுக்கையில் அவதிப்பட்டேன். இரண்டாவது வாரம், இருமலுடன் மிகவும் சோர்வாக இருந்தேன். தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டது. இரண்டாவது வார முடிவில் இருமல் மட்டும் தான். பகல் நேரத்தில் சற்று சுறுசுறுப்பாக இருப்பதை உணரமுடிகிறது.
இப்போது முழுவதும் உடல் நலம் தெறி வந்துவிட்டேன். என மாஸ்க் அணிந்தபடி, தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓல்கா வெளியிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.