கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை மரணம்... சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்...!

Published : Dec 03, 2020, 12:24 PM IST
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை மரணம்... சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்...!

சுருக்கம்

நிகிலா விமலின் தந்தை பவித்ரனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

வெற்றிவேல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த நிகிலா விமல். கடைசியாக கார்த்திக்கு ஜோடியாக நடித்த தம்பி படத்தில் நிகிலா விமலின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிகிலா விமலின் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

நிகிலா விமலின் தந்தை பவித்ரனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார். 

சிபிஐ கட்சியின் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் பவித்ரன். அவர் இறந்த செய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பவித்ரனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?