
கொரோனா ஊரடங்கு பிஸியாக சுற்றி கொண்டிருந்த பல நடிகைகளை வீட்டிலேயே அமர வைத்து விட்டது. அவர்களும் சும்மா இருக்க முடியாமல், ஒரு முறை கூட எட்டிப்பார்க்காத கிச்சனுக்கு சென்று, தன்னுடைய அம்மாவுக்கு உதவி செய்தது மட்டும் இன்று, வீடியோக்களை பார்த்து, விதவிதமான சமையல் செய்து அசத்தினர்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகும் ஒவ்வொரு சவாலையும் செய்து காட்டுவதற்காக, வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்தனர். இதுகுறித்த விடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.
சிலர், இந்த ஊரடங்கில் தங்களுக்கு தெரியாத சில விஷயங்களை கற்று கொள்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பூமி படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிதி அகர்வால், இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால், தமிழ் படங்களில் நடிக்கும் போது உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காக, தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தமிழ் கற்றுக் கொண்டு வருகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.