சின்மயின் பாலியல் புகாருக்கு நடிகை நதியாவின் அதிரடி கருத்து!

Published : Oct 13, 2018, 05:17 PM IST
சின்மயின் பாலியல் புகாருக்கு நடிகை நதியாவின் அதிரடி கருத்து!

சுருக்கம்

'சிறு துளி பெரு வெள்ளம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, சின்மயி metoo மூலம் ஆரம்பித்த புகார்கள் தற்போது நீண்டு கொண்டே போகிறது.

'சிறு துளி பெரு வெள்ளம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப, சின்மயி metoo மூலம் ஆரம்பித்த புகார்கள் தற்போது நீண்டு கொண்டே போகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஹாஷ்டாக்கில் சென்று நீங்கள் பெண்கள் எப்படி பட்ட கஷ்டங்களை அனுபவித்து உள்ளார்கள் என படித்தால், மிரண்டு போய் விடுவீர்கள். அப்படி ஆதங்கத்தையும், மன வேதனைகளையும் கொட்டி தீர்த்து வருகிறார்கள் பலர்.  

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகாரை முன்வைத்த போதும், ஹிந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா தீ இயக்குனர் நானா படேகர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியிட்ட போதிலும் மௌனம் காத்த பலர் இப்போது தங்களுடைய மௌனத்தை விட்டு வெளியே வந்து பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்கள்.  

தற்போது #Metoo ஹாஸ்டாகினை பற்றி பிரபல நடிகை நதியா அவருடைய கருத்தை சமீபத்தி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகியில்...  மேலிடத்தில் இருப்பவர்கள் முதலில் , யாரிடமும் சலுகைகள் எடுத்துக்கொள்ளகூடாது". இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும்.

ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் பெண்களும் பேச வேண்டும். இதைப்பற்றி பெண்கள் பேசுவது மிகவும் நல்லது நான் அதை பாராட்டுகிறேன் என்று சின்மயிக்கு ஆதரவாக  அதிரடியாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?
சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோவுக்கு கல்யாணம்... சீரியல் ஹீரோயின் உடன் விரைவில் டும்டும்டும்