ஏன் இப்படி தரங்கெட்டு இருக்கீங்க... தமிழ் சினிமாவை கிழிக்கும் நடிகர் சித்தார்த்!

By vinoth kumarFirst Published Oct 13, 2018, 4:34 PM IST
Highlights

வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கு, ஓரிருவரைத் தவிர தமிழ் சினிமா மவுனம் காப்பதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டள்ளார்.

வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கு, ஓரிருவரைத் தவிர தமிழ் சினிமா மவுனம் காப்பதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டள்ளார். திரையிசைப் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்ததை அடுத்து, வைரமுத்து, பாலியல் ரீதியாக தன்னிடமும் தவறாக நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

கடந்த 5 நாட்களாக வைரமுத்து மீதான சின்மயி-ன் குற்றச்சாட்டு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. சுவிட்சர்லாந்தில் 2004 ஆம் ஆண்டு நடந்த விழாவின்போது, மற்ற அனைவரும் சென்றுவிட்டநிலையில், என்னையும் என் அம்மாவையும் மட்டும் விழா ஏற்பாட்டாளர் இருக்கச் சொன்னார். பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

அப்படி ஒரு சம்பவம் சுவிட்சர்லாந்தில் நடைபெறவில்லை என்று நிகர்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருந்தார். வைரமுத்துவின் விருப்பத்தின்பேரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சின்மயி-ன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து புகார் கொடுத்தால், போலீசார் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இதேபோல் கனிமொழி எம்.பி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வைரமுத்துவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். இந்த நிலையில், திரைத்துறை - இசைத்துறையைச் சார்ந்த யாரும் பாடகி சின்மயிக்கு ஒரே ஒரு ஆதரவு குரலைத் தவிர வேறு யாரும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. 

அவர் வேறுயாருமல்ல நடிகர் சித்தார்த்தான். சின்மயிக்கு வேறு யாரும் ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்றாலும் எதிர்ப்பு குரலும் எழவில்லை. நடிகைகள் சமந்தா, வரலட்சுமி ஆகியோர் சின்மயிக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். வேறு யாரும் குரல் கொடுக்காத நிலையில், தமிழ் சினிமா மவுனம் காப்பதாக நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கடலுக்குள் மீன் ஒன்று அழுதால் கரைக்கு செய்தி வந்து சேருமா? இன்னும் எத்தனை நாட்கள் மவுனம் காக்கப்போகிறீர்கள் தமிழ் திரையுலகினரே... ஒருவேளை இன்னொருவரின் பெயர் வெளியே வரட்டும் என எதிர்பார்க்கின்றனரோ என நடிகர் சித்தார்த் அதில் கூறியுள்ளார். சிஸ்டம் மாற வேண்டும் என்றும் வெளியிடங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் நடிகர் சித்தார் குறிப்பட்டுள்ளார்.

click me!