வீடு தேடி வந்த அஜித் பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய தள்ளிய நடிகை... இப்ப என்ன நிலையில் இருக்காங்க தெரியுமா?

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 1, 2020, 5:38 PM IST

ஹீரோயினுக்கு தோழியாக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த மிஷா கோஷலுக்கு அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அசால்ட்டாக ஊதறித் தள்ளிவிட்டு, இப்போது புலம்பி வருகிறார். 


நான் மகான் அல்ல, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்தவர் மிஷா கோஷல். மூச் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு தோழியாக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த மிஷா கோஷலுக்கு அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அசால்ட்டாக ஊதறித் தள்ளிவிட்டு, இப்போது புலம்பி வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

அதாவது இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் என்னை அறிந்தால். தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்த அந்த படம் அவரது கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

அப்படிப்பட்ட படத்தில் முதலில் த்ரிஷா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க, மிஷா கோஷலை தான் நாடியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் அவர் கூறிய கதையில் தனது கதாபாத்திரம் ஒரே பாடலில் முடிந்துவிடுவது போன்று இருப்பதாக மிஷா கோஷல் நினைத்துள்ளார். 

மேலும் மிஷாவின் நண்பர்களும் இந்த மாதிரி சின்ன கேரக்டரில் நடித்தால் உன் கேரியர் அவ்வளவு தான், அப்புறம் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காது எனக்கூறி குழப்பியுள்ளனர். இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துள்ளார். அதன் பின்னரே த்ரிஷா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவருடைய பிரபலம் காரணமாக சில மாற்றங்களும் செய்யப்பட்டது. 

தற்போது என்னை அறிந்தால் படத்தில் நடிக்க மறுத்ததை நினைத்து நண்பர்களிடம் அவ்வபோது புலம்புகிறாராம் மிஷா கோஷல். பட வாய்ப்புகள் ஏதுவும் கிடைக்காததால் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 
 

click me!