மீரா மிதுன் கிட்ட இருந்த மிஸ் சவுத் இந்தியா படத்தைப் பிடுங்கி சனம் ஷெட்டிக்குக் குடுத்திட்டாய்ங்க...என்ன அநியாயம் பாஸ்?...

Published : Jun 03, 2019, 10:25 AM IST
மீரா மிதுன் கிட்ட இருந்த மிஸ் சவுத் இந்தியா படத்தைப் பிடுங்கி சனம் ஷெட்டிக்குக் குடுத்திட்டாய்ங்க...என்ன அநியாயம் பாஸ்?...

சுருக்கம்

தனக்கு எதிராக தொழில் போட்டியாளர்கள் சதி செய்கிறார்கள் என்று பிரபல மாடல் மீரா மிதுன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த நிலையில் மிஸ் சௌத் இந்தியா 2016 பட்டம் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டியை நோக்கி முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.  

தனக்கு எதிராக தொழில் போட்டியாளர்கள் சதி செய்கிறார்கள் என்று பிரபல மாடல் மீரா மிதுன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த நிலையில் மிஸ் சௌத் இந்தியா 2016 பட்டம் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டியை நோக்கி முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.  

மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும்,  மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

2016ஆம் வருடத்திற்கான மிஸ் சௌத் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.. தற்போது மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட அந்த பட்டம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் சௌத் இந்தியா-2016க்கான பட்டம் சனம் ஷெட்டிக்கு சென்று சேர்ந்துள்ளது.  'இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.    

சனம் ஷெட்டி பிரபல மாடலாக மட்டும் அல்லாமல், தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் 'அம்புலி 'படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!