சந்தையில் விற்கப்படும் வெட்டுக்கிளியை வாங்க அலைமோதிய கூட்டம்! வீடியோ பார்த்து கொந்தளித்த தமிழ் நடிகை!

Published : May 29, 2020, 08:52 PM IST
சந்தையில் விற்கப்படும் வெட்டுக்கிளியை வாங்க அலைமோதிய கூட்டம்! வீடியோ பார்த்து கொந்தளித்த தமிழ் நடிகை!

சுருக்கம்

சந்தையில் காய்கறிகள் விற்பது போல், ஒரு பையில் வெட்டுக்கிளிகள் போட்டு, விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை கோவமாக ட்விட் செய்துள்ளார்.  

சந்தையில் காய்கறிகள் விற்பது போல், ஒரு பையில் வெட்டுக்கிளிகள் போட்டு, விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை கோவமாக ட்விட் செய்துள்ளார்.

ஒருபுறம் கொரோனா வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது என்றால், மற்றொரு புறம்,வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை அழிக்க படையெடுத்துள்ளது. இதனால் பல விவசாயிகள் இந்த பிரச்சனை தமிழகத்திலும் தலை தூக்குமா என்கிற அச்சத்தில் உள்ளனர்.

நாக்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆரஞ்சு  மற்றும் காய்கறி போன்றவற்றை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை தீயணைப்பு படையினர் மற்றும் விவசாயிகள் தற்போது அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் வெட்டுக்கிளிகள் மரங்களில் இருக்கும் ஆரஞ்சு பழங்களை விட்டுவிட்டு மர இலைகளை சாப்பிட்டு முடித்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள், மும்பை மாவட்டத்தில் உள்ள பாலகர் மாவட்டத்திற்குள் நுழைய அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள், தீயணைப்பு படையினர் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இப்படி வெட்டுக்கிளிகளால் பதற்றமான சூழல் உள்ள நிலையில், வெட்டுக்கிளிகளை பையில் போட்டு, காய்கறிகள் போல் பாலைவன பகுதிகளில் விற்பனை செய்வதால் தான் செம்ம கடுப்பாகி உள்ளார் நடிகை மீரா சோப்ரா.

தமிழில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே, சிபிராஜுக்கு ஜோடியாக லீ,  அருஜுனுடன் மருதமலை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. இவர் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியும் ஆவார்.

இந்நிலையில் இவர் ஒருவர் வெட்டுக்கிளிகளை உயிருடன் சாப்பிடுவது மற்றும் சந்தையில் வெட்டுக்கிளிகள் விற்பனை செய்யப்படும் வீடியோவை வெளியிட்டு , "இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது, இது நிஜம்தானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னுமும் சாப்பிடுகிறார்களா?  கொரோனா வைரஸிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025 பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் கிங் யார்? முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ