“என் இதயமே நின்னு போச்சு”... பிரபல ஹீரோவை பார்த்து மெர்சலான மீனாவின் பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 16, 2020, 06:49 PM ISTUpdated : May 16, 2020, 06:51 PM IST
“என் இதயமே நின்னு போச்சு”... பிரபல ஹீரோவை பார்த்து மெர்சலான மீனாவின் பதிவு...!

சுருக்கம்

இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மீனா தான் ஜோடி என்று கூறப்படுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக தற்போது ஷூட்டிங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மீனா தனது மலரும் நினைவுகள் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: “முத்தம் கொடுக்க முடியாது”... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கமலை கவுத்த பிரபல நடிகை...!

பிரபல பாலிவுட் ஹீரோ ஹிரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை மீனா பகிர்ந்துள்ளார். அத்துடன் ''எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது. என் ஆல் டைம் ஃபேவரைட்டான ஹிரித்திக் ரோஷனை பெங்களூருவில் அவரது திருமணத்துக்கு பிறகு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன்'' என பதிவிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!