நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு... அதிர்ச்சியில் திரையுலகம்!!

By Narendran S  |  First Published Jun 29, 2022, 12:08 AM IST

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் மீனா!

இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கோவிட் பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்புக்கு இதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

பெங்களூரைச் சேர்ந்தவர் வித்யாசாகர். இவருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா விஜயின் தெறி படத்தில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொண்ணூறுகளில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார். கமல், ரஜினி உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடிகை மீனா நடித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!