விஜய்யுடன் நடித்த "தெறி" பேபியா இது?... சோசியல் மீடியாவில் வைரலாகும் மீனா மகளின் புதிய போட்டோ...!

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் கண்ணழகி மீனா. தற்போது  24 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. 

Latest Videos

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே, 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் மூலம் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா. அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அம்மா மீனாவுடன் நைனிகா எடுத்துள்ள அந்த செஃல்பி புகைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்... 

click me!