ஹீரோவின் அம்மாவாகிறார் நடிகை மீனா..!

 
Published : Dec 24, 2017, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஹீரோவின் அம்மாவாகிறார் நடிகை மீனா..!

சுருக்கம்

actress meena acting hero mother

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், நவரச நாயகன் கார்த்தி என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். 

திருமணத்திற்குப் பிறகு அக்கா மற்றும் குழந்தைகளுக்கு அம்மா உள்ளிட்ட சீனியர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.

இளம் நடிகர் பெல்லாம்கொண்ட ஸ்ரீநிவாஸ் நடிக்க இருக்கும் பெயரிடப் படாத படத்தில் இவருக்கு அம்மாவாக மீனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க 'அம்மா மகன் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை  மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது.

மேலும் இந்தப்படத்தில் மீனாவிற்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் படப் பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு மீனாவிற்கு தமிழில் நடிக்க வாய்புகள் எதுவும் கிடைக்க வில்லை ஆனால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில்  சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீதா எடுத்த முட்டாள்தனமான முடிவு... நீத்துவால் வில்லங்கத்தில் சிக்கும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!