பசுபதியின் நாயகிக்கு பிறந்தநாள்.. நாட்டாமையோடு சென்று வாழ்த்து சொன்ன ராதிகா - இணையத்தில் போட்டோஸ் வைரல்!

Ansgar R |  
Published : Sep 16, 2023, 09:46 PM IST
பசுபதியின் நாயகிக்கு பிறந்தநாள்.. நாட்டாமையோடு சென்று வாழ்த்து சொன்ன ராதிகா - இணையத்தில் போட்டோஸ் வைரல்!

சுருக்கம்

பிரபல நடிகை மீனா இன்று செப்டம்பர் 16ம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், சினேகா, அனிதா விஜயகுமார் உள்பட பல திரைப்பிரபலன்கள் ஒன்று கூடி, அவருடைய வீட்டுக்கு சர்பிரைஸ் விசிட் ஒன்று அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாகவே சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் மீனா. சென்னையில் பிறந்த மீனா துரைராஜ் 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு வெளியான ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இவர் நாயகியாக களமிறங்கினார். அதன் பிறகு 1993ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான் திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்து புகழின் உச்சிக்கே சென்றார் நடிகை மீனா. கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல், இந்திய திரை உலகின் பல மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வருகின்றார் நடிகை மீனா. 

கவர்ச்சியில் உச்சகட்ட வேகத்தில் செல்லும் தர்ஷா குப்தா.. உறைந்து போன நெட்டிசன்கள் - செம ஹாட் போட்டோஷூட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் என்று பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவருக்கும் இவருக்கும் திருமணமான நிலையில், அவர் சென்ற 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவாக காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது தனது கணவரின் பிரிவிலிருந்து மீண்டு திரைப்படங்களில் நடிக்க முனைப்பு காட்டி வரும் நடிகை மீனா அவர்கள் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், நடிகை சினேகா, மருத்துவர் அனிதா விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் அவரது வீட்டிற்கு சர்ப்ரைஸ் ஆக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். 

இந்நிலையில் அவருடன் பல திரைப்படங்களில் நாயகனாக தோன்றிய சரத்குமார் அவர்களும், அவருடைய மனைவியும் தமிழ் திரை உலகின் மூத்த நடிகையுமான ராதிகா சரத்குமாரும் நேரில் சென்று பூங்கொத்துக்களை அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மீனா பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் விசிட் அடித்த பிரபலங்கள்!! அடேங்கப்பா இத்தனை பேரா... வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்