
90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மந்திராவின் வீடுகளில் கடந்த ஒரு சில தினங்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் அப்போது பல விலை மதிப்பு மிக்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
அஜீத்தின் ‘ரெட்டை ஜடை வயசு’, விஜய்யின் ’லவ் டுடே’உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மந்த்ரா. படு கிளாமரான வேடங்களில் வெளுத்துக்கட்டிய இவர் 90 களில் தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின்னர் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்த கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பரப்படங்களிலும் நடித்த பின்னர்தான் அந்நிறுவனத்தின் உரிமையாளர் மந்த்ராவின் நெருங்கிய உறவினர் என்பது வெளியே தெரிய வந்தது.
உடல் குறைப்பு, வனவனப்பு போன்றவற்றிற்கு ஆலோசனைகள் வழங்கி வந்த கலர்ஸ் நிறுவனத்தின் பல்வேறு தமிழகம் மற்றும் ஆந்திரா முழுக்க உள்ளன. இந்நிறுவனத்தின் சொத்துக்குவிப்பு குறித்து வருமான வரித்துறையினருக்கு சில துப்புகள் கிடைக்கவே அவர்களது அவைத்துக் கிளைகளிலும் கடந்த சில தினங்களாகவே வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனைகள் நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இந்த சோதனைகளில் நடிகை மந்த்ராவின் சென்னை மற்றும் ஆந்திர மாநில வீடுகளும் தப்பவில்லை. மிக விரைவில் மந்திராவின் தோழி நடிகைகள் சிலரும் சோதனைக்கு ஆளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.