
பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய லாஸ்லியா தற்போது திரைப்பட நாயகியாக மாறிவிட்டார். இந்நிலையில் இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.
மேலும் செய்திகள்: முடிவுக்கு வருகிறது நயன் - விக்கி காதல்! விரைவில் டும் டும் டும்?
கோலிவுட் ரசிகர்களுக்கு எந்த ஒரு அறிமுகமும் இன்றி, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர், இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவர் தன்னை மேடையில் அறிமுக படுத்திக்கொண்டபோது பேசியதும், இவரின் சிரிப்பும் ஆரம்பத்திலேயே பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. இதனால், முதல் நாளே இலங்கை பெண்ணுக்கு ஆர்மி துவங்கி தலையில் வைத்து கொண்டாடினர் ரசிகர்கள்.
மேலும் நிகழ்ச்சியில் உள்ளே இவர், தினமும் மார்னிங் போடும் குட்டி ஆட்டத்தை பார்க்கவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்ததும் உண்டு. ஆரம்பத்தில் அண்ணா என அழைத்த கவினை கடைசியில் காதலிப்பது போல் நடந்து கொண்டதால், இவர் மீது சிறு கோவம் ஏற்பட்டது மக்களுக்கு.
மேலும் செய்திகள்: 47 வயது... இனி திருமணமே வேண்டாம்..! முக்கிய நபரின் இழப்பால் நடிகை எடுத்த விபரீத முடிவு!
இருப்பினும் கடைசி நேரத்தில் கவினுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் கூடியதால், இருவரும் நிஜமாகவே ஒன்று சேர வேண்டும் என தற்போது வரை ரசிகர்கள் விதவிதமான போஸ் கிரியேட் செய்து தங்களுடைய ஆசையை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் கவின் - லாஸ்லியா என இருவரும் இதனை சற்றும் பொருட்படுத்தாமல், அவரவர் தங்களுடைய திரைப்பயணத்தில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். அந்த வகையில், லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், இந்தியன் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும், நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
நடிகை ஆனதில் இருந்து அவ்வபோது விதவிதமான புகைப்படங்கள் வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வரும் லாஸ்லியா, புசு புசுனு இந்த தன்னுடைய உடலை பாதியாக குறைய, செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் ஊரடங்கு நேரத்திலும் ரசிகர்கள் உறக்கத்தை கெடுக்கும் விதமாக, ஜீன்ஸ், மற்றும் இறுக்கமான உடை அனைத்து விதவிதமான புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.